Hindu Tamil Cultural Association Enfield (Reg Charity No : 1143043)
ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம் என்பீல்ட்

Sri Nagapooshani Ambaal Temple Enfield

Construction Works

என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் 04-06-2017 இல் நடைபெற திருவருள் கூடியுள்ளது. இதனை முன்னிட்டு ஆலய காட்டுமான பணிகள் துரிதளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விநாயகர் , முருகர் காட்டுமான ஸ்தூபிகள் வைக்கப்பட்டுள்ளன

ஆலய கட்டுமான பணிகள்

இங்கிலாந்தின் தலைநகரம் இலண்டன் மாநகரில் என்பீல்ட் எனும் பகுதியில் அருள் வழங்கும் அன்னையாக அழகு சௌந்தரியாக அமர்ந்திருக்கும் அன்னை பராசக்தி நாகபூசணி அம்பாளிர்கு ஞாயிறு அன்று 04-06-2017 மகா கும்பாபிஷேகம் இடம்பெற திருவருள் கூடியுள்ளது. கும்பாபிஷேகத்தினையொட்டி அழகு சௌந்தரி நாகபூசணி அம்பாளின் ஆலயம் கருங்கல்லினால் கட்டப்படும் ஆலய மண்டபத்தின் உள்ளே 21 அடி உயரமான ஒரே கல்லில் உருவாக்கப்பட்டதும் சிற்ப வேலைபாட்டோடும் கூடிய 10 தூண்களும் விநாயகர், முருகன், சிவன், தட்சணாமூர்த்தி, நடராஜர், நாராயணர், பைரவர், நவக்கிரகதேவர்கள், சண்டிகேஷ்வரி முதலான மூர்த்திகளிற்க்கும் ஆலயம் அமைக்கப்பட்டு, வசந்த மண்டபமும் அமைக்கப்பட்டு பல ஒற்றுமை கைகளினாலும் இணைந்து ஆலய கட்டுமான பணிகள் துரிதளவில் அம்பாளின் அருள்காட்சி பெற இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது