திருவருள்மிகு என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் ஓர் வரலாற்று நோக்கு HINDU TAMIL CULTURAL ASSOCIATION (ENFIELD) AN ASSOCIATION THAT PROMOTES MULTIFAITH CONCEPTS BY EMBRACING ALL THE COMMUNITIES & CULTURES IN ENFIELD
This Association was founded in 2001 by a group of individuals, who are socially interactive and culturally involved and residing in and around Enfield Borough, came together by agreeing to create a religiously and culturally based environment for the Tamils who were displaced from their Homeland, Sri Lanka and migrated and settled down in the same area in order to assist them in releasing their pain, distresses and sufferings they had experienced in Sri Lanka.
ஆலய பிரதான கடமைகளும்இ சடங்குகள்… பண்டிகைகள்… கிரியைகளும்
• தொடர்ந்து ஆறுகால நித்திய நைமித்திய வழிபாடுகளும் நடைபெறுகின்றன. • வருடம் தோறும் அலங்காரத்திருவிழா 2004ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றது. • 2008 ஆம் ஆண்டில் இருந்து 100 நாள் கோடி அர்ச்சனை வருடம் தோறும் நடைபெறுகின்றது. • வருடம் தோறும் தை பூரம்இ மாசிமகம்இ வசந்த நவராத்திரிஇ நவராத்திரி விரதம்இ கந்தசஸ்டி விரதம்இ கேதாரகௌரி விரதம்இ விநாயகர் பெருங்கதைஇ திருவெண்பாவை விரதம் போன்ற விரத வழபாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. • மாதந் தோறும்; வருகின்ற பௌர்ணமிகளில் சிஸ்ரீ சக்கரைப் பூiஐயும்இ சதுர்த்திஇ சங்கடசதுர்த்திஇ கார்த்திகை விரதம்இ பிரதோசவிரதம்இ ஏகாதசி விரதம் ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. • என்பீல்ட் நாகம்மையின் பெயரினால் 2004 ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்பு அன்று ராகுகலாப்பூiஐயும்இ அடியார்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற வேண்டி தங்கள் கைகளினால் பால் அபிசேகம் செய்யும் பாக்கியமும் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக எமது ஆலயத்தில் நாகசாந்தி வழிபாடு மிகவும் உன்னதமாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கல்வியும்இ கலையும்
சிறுவர் சிறுமியரின் ஆற்றல்கள் ஆளுமைகளை ஊக்குவிக்கும் முகமாக பண்ணிசைஇ Keyboard,வயலின்இ வீணைஇ சங்கீதம்இ மிருதங்கம் ஆகிய கலை சார்ந்த வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் கணிதம்இ விஞஞானம் ஆகிய பாடங்களும் நடைபெற்று வருகின்றன. சலங்கை வினோதம் (பரதநாட்டியம்) போன்ற கலைப்போட்டிகளும்இ இசைவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. அம்பாளின் அருட்திறனை வெளிக்கொணரும் வகையில் கவசம்இ போற்றிமாலைஇ மற்றும் பாமாலைகளாக இறுவெட்டுக்களும் வெளிடப்பட்டுள்ளது.
சங்கத்தின் தொண்டுகள்
தாயக மக்களுக்கு உதவும் நோக்கில் அம்பாளின் திருவருளின்துணையுடன் ‘தாயின் நிழல் திட்டம்’ இந்து தமிழ் கலாச்சாரச் சங்கத்தினால் உருவாக்கப்பட்டு அடியார்களின் உதவியோடு மனிதநேயப்பணிகள் நடைபெறுகின்றன. இதன்கீழ் மகாதேவா ஆச்சிரமம்(கிளிநொச்சி) செஞ்சோலை இல்லம் அன்பு இல்லம்இ (விநாயகபுரம்) விவேகானந்தா இல்லம்(வாழைச்சேனை), Hary இல்லம் (மட்டக்களப்பு) ஆகிய சிறியோர் இல்லங்களுக்கு நிதியுதவியளித்து வருகின்றோம். தாயகத்தில நிதியிலர்;இ கதியிலர்இ பதியிலர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக மாதந்தோறும் நிதியுதவியளிக்கப்படுகிறது. வவுனியாவில் மணிபுரத்தில் உள்ள ஆனந்த இல்லத்தில் மனநலம் குன்றிய தாய்மார்களின் பராமரிப்புகான கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது! மேலும் இவற்றைவிட விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கான கிணறுகள் அமைத்துக் கொடுத்தல் போன்ற நலன்புரி திட்டங்களுடன் மட்டுமல்லாமல் முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற இரண்டு வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளுக்குப் பால்மா சத்துணவுத்திட்ட உதவிஇ வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவிஇ நல்லை ஆதீனக்கட்டிடப் புனரமைப்புப் பணிக்கான நிதியுதவிஇ பல்கலைக்கழக சைவ மகாநாட்டிற்கான நிதியுதவிஇ யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ருமு) தாயகத்தில் ஏணிஏறும் எனும் புத்தக வெளியீட்டுச் செலவுஇ தாயகத்தின் மாற்றுத்திறனாளிகளின் மெய்வல்லுனர் போட்டிகளுக்கான பிரதான அனுசரணைஇ நூலக இணையத்தள சேவைகளுக்கான நிதியுதவிஇ யாழ்ப்பாணத்தில் St. Johns (சென்யோன்ஸ) பாடசாலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் படிப்பதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகின்றது. இவைகள் மட்டுமல்லாமல் இங்கிலாந்து இலண்டனில் தமிழ் பாடசாலைகளுக்கான உதவிகள்இ இலண்டனில் நடைபெற்ற திருமுறை மாநாடுஇ தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டுக்கான நிதிப்பங்களிப்புஇ இலண்டனில் தமிழர் விளையாட்டு விழாவிற்கான நிதியுதவி அத்துடன் MIND HEART UK, AIR AMBULANCE ஆகியவற்றிக்கும் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகின்றோம். இதனை விட நேபாளத்தில் பூகம்பத்தினால் பாதிக்கப் பட்ட மக்களிற்கும் நிதியுதவி செய்துள்ளோம். இத்தொண்டுகள்… பணிகளின் தொடர்ச்சியாக… தாயகத்தில் இல்லங்களில் வாழும் சிறுவர் சிறுமியர்கள்.. குடும்பத்தனர்க்கு..யாம் எமது நிதியுதவிகளையும்… ஆதரவினையும் HTCA இன் ‘தாயின் நிழலின்’ ஊடாக ஆற்றிவருகின்றோம்.
2002 ஆம் ஆண்டு
எமது தாயக மக்கள்தம் மொழிஇ கலைஇ கல்விஇ பண்பாடுஇ ஆன்மீகமஇ; வாழ்வியல்இ வரலாறு குறித்த விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி நோக்கிய பணிகளில் ஈர்ப்புடன் ஈடுபடும் நோக்கோடும்…
புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது இளைய மற்றும் நாளைய சந்ததியினரின் நலன்கள்இ நன்மைகள் கருதியும்…
சமூகப்பணிகளில் தம்மை ஈடுபடுத்த வல்ல ஒன்பது (09) பேர்களை அறங்காவலர்களாகவும்…அங்கத்தவர்களாகவும் கொண்ட இந்து தமிழ் கலாச்சார சங்கம் (என்பீல்ட்) எனும் அமைப்பு தோற்றம் பெற்றது.
சங்கத்தோற்றத்தின் பரந்துபட்ட நோக்கினை நிறைவேற்றுவதற்கான முதற்படி நிலையாக….அம்மனின் திருவருள் கொண்டு என்பீல்ட்; பகுதியில் அம்பாளின் ஆலயமொன்றினை நிறுவும் திட்டம்… இவற்றோடு சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசித்த பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இதன் விளைவாக அம்பாள் ஆலயத்தின் பிரதம குருவான கமலநாதக்குருக்களினதும்…மற்றும் சிவசிறீ சச்சிதானந்தக்குருக்களினதும் இணைந்த ஆசிகள்.. வழிகாட்டல்கள்…வழிபாட்டுக் கிரியைகளோடு… அம்பாள் வழிபாடு என்பீல்ட்டில் ஆரம்பமானது.
இதனைத்தொடர்ந்து பின்வரும் நிகழ்வுகள் அன்றுதொட்டு இன்றுவரை நடைபெற்று வருகின்றன.
Malden hall
வெள்ளிக்கிழமை விக்ரோறியா வீதியில் அமைந்துள்ள Malden hall இல் அம்பாளின் திருவுருவப் படத்துடன் அம்பாள் வழிபாடு ஆரம்பமாகி தொடர்ந்தும் இம்மண்டபத்தில் பிரதி வெள்ளி தோறும் வழிபாடு நடைபெற்று வந்தது.
என்பீல்ட் நாகபூசணி அம்பாள்
வெள்ளிக்கிழமை என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் என்ற பெயரில் அம்பாளின் திருவுருவச்சிலை ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது
அம்பாளுக்கான சொந்தக் கட்டம்
ஆலயத்துக்கான கட்டிடம் 61’ – 65’ Church Lane , Edmonton இல் கொள்வனவு செய்யப்பட்டது. இதற்கான நிதியின் ஒரு பங்கினை 09 அறங்காவலரும்…மேலும் அதனோடு தலா 5000 பவுண்களை 18 திருவிழா உபயகாரர்களும் வழங்கிப் பேராதரவு நல்கியமையால்..அம்பாளுக்கான சொந்தக் கட்டம் கொளவனவு செய்யப்பட்டது.
விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி
07.09.2003 விநாயகர்இ முருகன்இ தட்சணாமூர்த்தி;இ வைரவர்இ நவக்கிரக தேவர்கள் முதலான தெய்வ மூர்த்திகளுடன் அம்பாளுக்கு பஞ்ச குண்டலங்களோடு கூடிய மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.
2005 ஆம் ஆண்டு
2005 ஆம் ஆண்டு முதன் முதலாக கொடியேற்ற மகோற்சவம் நிகழ்ந்து தொடர்ந்;;து அவ்வருடமே அம்பாளுக்கு புதிய சித்திரத் தேரும் உருவாக்கப்பட்டு அம்பாள் தேரேறி வருகின்ற நிகழ்வு நிகழ்ந்தது.
2008 ஆம் ஆண்டு
2008 ஆம் ஆண்டு 100 நாட்களாகக் கோடி அர்ச்சனை நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டு
2010 ஆம் ஆண்டு பிள்ளையாருக்கும் புதிய சித்திரைத் தேர் உருவாக்கப்பட்டு விநாயகரும் தேரேறி வருகின்ற நிகழ்வு ஆரம்பமானது.
2013 ஆம் ஆண்டு
2013 ஆம் ஆண்டு ஆலயத்தினை மறுநிர்மாணம் செய்வதற்கான தீர்மானமும்இ அதற்கான திட்டமும் இந்து தமிழ் கலாச்சாரச் சங்கத்தினரால் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வினைத்திறனும்இ கட்டிட அனுபவமும் கொண்ட ஓர் ஆலோசனைக் குழுவினை ஆலயப்பிரதமக் குருக்களின் ஆன்மீகம் சார்ந்த பங்களிப்புடன் இந்து தமிழ் கலாச்சாரச் சங்கம் தேர்வு செய்து அப்பணிகளை அவர்களிடம் ஒப்படைத்தது.
இதனைத் தொடர்ந்து என்பீல்ட்கவுன்சிலிடம் கோயில் கட்டிட மறுநிர்மாணத்திற்கான அனுமதியைப் பெறுவதற்குரிய வேலைகள் ஆரம்பமானது.
இதேகாலத்தில்…ஆலய கட்டிடத்தினைத் பண்டைத்தமிழர் சைவப்பாரம்பரிய மரபுரீதியான ஆன்மீகம் சார்ந்த நெறிமுறைகளுக்கிணங்கக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து செயற்பாடுகளும் இலண்டனிலும்இ தமிழகத்திலும் ஆரம்பமாகின. இதன் முதல் நிகழ்வாக கருங்கல் திருப்பணிகளுக்கான பொறுப்புக்களைத் தமிழர் கட்டிட வரலாற்றுப் பாரம்பரிய பெருமைமிக்க மாமல்லபுரத்தின் சிற்றூராம் வடகடம் பாடியிலுள்ள சிற்பாசாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு
10.04.2014 ஆம் ஆண்டு கோயில் கட்டிடத்துக்கான அனுமதி என்பீல்ட் கவுன்சிலினால் வழங்கப்பட்டது.
தொடர்ந்து… ஆலய மூலஸ்தான நிலைப்புள்ளிகளின் கணிப்புகள்இ கட்டடநிர்மாணப் பரிமாண நிலப்புள்ளித்தேர்வுஇ மற்றும் மரபுசார் நவதானியப் பயிரிடல்இ ஆ மேய்தல் என்ற இன்னோரன்ன செயற்பாடுகளும்… கட்டிடப் பொறியியல் அத்திவார வேலைகளும் இடம் பெற்றன.
கருங்கல் திருப்பணி
25.01.2014 ஆம் ஆண்டு கருங்கல் திருப்பணி வடகடம்பாடியில் சிறப்பாக நிகழ்ந்தேறியது.
சங்குஸ்தாபன நிகழ்வுகள்
22.06.2014 ஆம் ஆண்டு சங்குஸ்தாபன நிகழ்வுகள் மிக விமரிசயாக நடைபெற்றதோடு அதனைத் தொடர்ந்து பாலஸ்தான கட்டிட வேலைகள் ஆரம்பமானது.
பாலஸ்தானம்
28.08.2014 ஆம் ஆண்டு பாலஸ்தானம் நடைபெற்று… அத்தோடு பிரதான ஆலய கட்டிட வேலைகளும் ஆரம்பமாகின.
ஆலயப்பிரவேசம்
01.06.2017 ஆம் ஆண்டு ஆலயப்பிரவேசம் (Opening Ceremony) நடைபெற்றது.
மகாகும்பாபிசேகம்
04.06.2017 ஆம் ஆண்டு உத்தமோ உத்தமபட்ச 33 குண்ட சகித ஸ்வர்ன பந்தன மகாகும்பாபிசேகம் நடைபெற்றது.
முருகனுக்கான தேரோட்டம்
2017 ஆம் ஆண்டு முருகனுக்கான தேரோட்டம் ஆரம்பமானது.