தாயின் நிழல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் துணைகொண்டு ஆலயம் ஆரம்பித்த நாள் முதல் ஆன்மீக பணிகளோடு மனிதாபிமான உதவிகளை முன்னிலை நிறுத்தி சமுகப்பணிகள் ஆற்றி வருவது யாவரும் அறிந்ததே. அவ்வகையில் ’தாயின் நிழல்” எனும் திட்டத்தின் மூலம் எமது தாயகத்தில் நிதியால், பதியால், கதியால் நிலைகுலைந்த தொப்புட்கொடி உறவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்தவருகின்றது.

இந்த தன்னலமற்ற மனிதாபிமான செயலுக்கு உதவிபுரியும் அடியவர்களுக்கு அம்பாளின் அருள்கிடைக்கப் பிரார்த்திப்பதோடு அவ் இல்லக்குழந்தைகளின் சார்பாக நன்றிகளைத் தெறிவித்துக்கொள்கின்றோம்.

Welcome to HTCA, a charity helping children and their families to rebuild their shattered lives in Sri Lanka. The HTCA was started in 2002 and our main aim is To advance the Hindu religion in particular but not exclusively by the establishment and management of the Nagapooshani Ambaal Temple and the advancement of education in the Tamil language, culture and art.

Mahadeva Illam

மகாதேவா ஆச்சிரம சைவச் சிறுவா் இல்லம் (குருகுலம்) கிளிநொச்சியில் ஜெயந்திபுரத்திலும், புதுமுறிப்பு என்னும் கிராமத்திலும் அமைந்துள்ளது.

இந்த ஆச்சிரமத்தின் அரவனைப்பில் உள்ள 9-16 வயதுகளுக்கு உட்பட்ட 326 குழந்தைகளில் 150 சிறுவா் சிறுமியா்கள் நாகபூசணி அம்பாள் ஆலயத்தாலும் ஆலய அடியாா்களாலும் ஆதரிக்கப்பட்டு வருகிறாா்கள். இக்குழந்தைகள் தங்கும் கட்டிடம், உணவு, உடை, கல்வி, முதலிய அத்தியாயவசிய தேவைகளை ஆலயமும் ஆலய அடியாா்களும் தொடா்ந்து செய்துவருவாா்கள்.

இங்குள்ள குழந்தைகள் அனைவரும் தாய்நாட்டில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவா்களாகும். இவா்கள் அனைவரதும் தேவைகள் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டே சோ்த்துக்கொள்ளப் படுகிறாா்கள்.

‘Kurukulam’- The Mahadeva Achchirama is based in a village named Puthumuripu,Jeyanthi Nagar in Kilinochchi District. This Achchiramam (a place of learning and contemplation) is a home for 326 children, aged from 9-16. Enfield Nagapooshani Ambaal Temple and her devotees have been continuously supporting 150 children’s from this home since 2009. We provide financial help, and maintenance of these children’s life necessities but also for the building. All the children in this Home have been affected by the war in Sri Lanka.

Anbu Illam

இவ்வில்லம் முத்தையன்கட்டில் உள்ள விநாயகபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆலயத்தாலும் ஆலய அடியாா்களாலும் 50 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படுகிறாா்கள். இவா்களின் உணவு, உடை, கல்வி போன்ற தேவைகளையும் செய்துவருகிறோம்.

இக்குழந்தைகள் தாயகத்தில் ஏற்பட்ட போரினாற் பாதிக்கப்பட்டவா்களாகும். இவா்கள் ஒவ்வொருவரதும் தேவைகள் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டே இல்லத்தில் சோ்த்துக்கொள்ளப்படுகின்றாா்கள்.

Anpu Illam is based in Muttuvinayagarpuram, Ottisutan, Enfield Nagapooshani Ambaal Temple and her devotees are looking after 50 boys in this children’s home by providing financial help such as food, clothes, education, etc. It was announced by the directives of this Home that all the children in this Home have been affected by the war in Sri Lanka and each admission was means checked before giving admittance.

Sencholai Illam

செஞ்சோலை சிறுமியா் இல்லம் கிளிநொச்சியில் உள்ள திருவையாற்றில் அமைந்துள்ளது. இவ்வில்லத்தில் மொத்தம் 78 பெண் குழந்தைகள் உள்ளனா். தாயகத்தில் ஏற்பட்ட போரினால் பாதிக்கப்பட்டவா்கள். என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தாலும் சில அடியாா்களின் உதவியாலும் 78 பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றாா்கள்.

Senchcholai Children Home is located at Thiruvaiyaru in Mulaitheevu District. Enfield Nagapooshani AmbaalTemple has been continuously supporting Sencholai. We provide for the shelter, education and medical facilities of the 78 girls who are affected by the war in Srilanka.

Anantha Illam

ஆனந்த இல்லம் வவுனியாவில் மன்னார் வீதியிலுள்ள மணிப்புரத்தில் இயங்குகிறது. இவ்வில்லம் போரினால் மனநிலை பாதிக்கப்பட்ட தாய்மாா்களுக்கு சகல வசதிகள் அளிக்கும் மறுவாழ்வழிக்கும் நிலையமாகும்.

இந்நிலையத்தின் கட்டிடம் உட்பட அங்குள்ள பயனாளிகளின் உணவு, உடை, வைத்திய வசதி, போன்ற அத்தியாவசிய தேவைகளையும் என்பீல்டட் நாகபூசணி அம்பாள் ஆலயம் ஒரு நிரந்தர சேவையாகச் செய்து வருகிறது. தாய்மாா்கள் ஒவ்வொருவரதும் தேவைகள் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டே சோ்த்ததுக்கொள்ளப் படுகிறாா்கள்.

Anantha Illam is located at Manar Road in Manipuram in Vavuniya District. This Illam provides a comfortable home with all necessary facilities such as food, clothes, medical facilities for mothers who are mentally handicapped and have no other means of support. Enfield Nagapooshani Ambaal Templehas been funding Anantha Illam home since 2009, to build shelter, infrastructures and to sustain their invaluable services to this most vulnerable yet neglected sector of our society. Our support also provides for various social and communal activities to improve their quality of life in a secure environment. All the Mothers in this home have been affected by the war in Sri Lanka and each admission was means checked.

Hari Illam

இவ்வில்லம் மட்டக்களப்பில் அமைந்துள்ளது. இங்கே ஆலயத்தாலும் ஆலய அடியாா்களாலும், ஆதரவற்ற 51 சிறுவா்கள் பராமரிக்கப்பட்டு வருகிறாா்கள். இவா்களின் உணவு, உடை, கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளையும் தொடா்ந்து செய்து வருகின்றோம்.

இக்குழந்தைகள் அனைவரும் தாயகத்தில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவா்களாகும். இவா்கள் ஒவ்வொருவரதும் தேவைகள் தனித்தனியா மதிப்பீடு செய்யப்பட்டே இல்லத்தில் சோ்த்துக்கொள்ளப்படுகிறாா்கள்.

Enfield Nagapooshani Ambaal Temple and her devotees are continuously helping to look after 51 boys in this home by providing financial help for essentials such as food, clothes, education, etc. It was confirmed by the directors of this Home that all the children in this Home had been affected by the war in Sri Lankaand each admission was means checked.

Vivekanantha Illam

இவ்வில்லம் மட்டக்களப்பில் வாழைச்சேனையில் அமைந்துள்ளது. இங்கே ஆலயத்தாலும், ஆலய அடியாா்களாலும் ஆதரவற்ற 33 பெண்குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறாா்கள். இவா்களின் உணவு, உடை, கல்வி போன்ற தேவைகளையும் தொடா்ந்து செய்து வருகின்றோம். இவா்கள் ஒவ்வொருவரது தேவைகள் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டே இல்லத்தில் சோ்த்துக்கொள்ளப் படுவதாக நிா்வாகிகள் அறிவித்துள்ளாா்கள்.

Based in Irathinam Road, Vaalachenai, Batticaloa, Enfield Nagapooshani Ambaal Temple and her devotees are looking after 33 girls by providing financial help for essentials such as food, clothes, education, etc.
This home and the Hari Children Home are under the same management.