No comments yet

சைவச் சின்னங்கள் முனைவர்.

சைவச் சின்னங்கள்
முனைவர். க. சேகர்
தர்மபுரம் ஆதினம் கலைக்கல்லூரி
தர்மபுரம், மயிலாடுதுறை
தமிழ்நாடு

உலகில் காணப்படும் சமயங்கள் பல. எனினும் சைவ சமயமே சமயம். சைவத்தின் மேல் சமயம் வேறில்லை. அதி சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல் என்பது ஆன்றோர்மொழி. இதனைச் சிவஞான சித்தியார்.

“ஓது சமயங்கள் பொருள் உணரும் நூல்கள்
ஒன்றோடொன்று உலபளவும் இவற்றுள்
யாதுசமயம்? பொருள் நூல் யாதிங்கென்னில்
இது ஆகும் இது அல்லது எனும் பிணக்கதிண்றி

நீதியினால் இவையாவும் ஓரிடத்தே காண
நின்றது யாதொரு சமயம் அது சமயப்பொருள் நூல்.”

என விளக்கம் அளிக்கிறது. சமயங்கள் யாவும் நெறி என்று சொல்லப்படும் நிலையில் சைவ சமயம் பெருநெறி என்று சொல்லப்படுகின்றது. பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் என்பது ஞானசம்பந்த வாக்கு.

இத்தகு பெருமையும் தொன்மையும் தலையாய தஹ்த்துவ நெறியும் கொண்ட சமயத்தில் பிறந்து ஒழுகுவது பெரு எனச் சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது அப்பாடல்.

“வாழ்வெனும் மையல்விட்டு வறுமையால் சிறுமைத்தப்பித்
தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம்சாரல்
ஊழ் பேரால் அரிது.”

திருவள்ளுவர் பிறவியை பெருங்கடல் என்கிறார். கரை காணாதிருப்பது கடல். அது போல் வினையால் பிறவியும், பிறவியால் வினையும் காரண காரிய தொடர்ச்சியால் கரையின்றி இருப்பது பிறவி. இப்பிறவி என்பது தீராநோய் என்பார் நாவுக்கரசர். எல்லாப் பிறப்பும் பிறப்ந்து இளைத்தேன் என்பார் மாணிக்கவாசகர்.

“பிறப்பென்னும் பேதைமை நீங்கிச்சிறப்பென்னும்
செம் பொருள் காண்பதறிவு.” (குறள்)

பேதமையால் அல்லது அறியாமையால் பிறப்பும் – செம்பொருளால் அல்லது இறையருளால் சிறப்பும் உண்டாகிறது. எனவே, இறைவனின் திருவடி ஒன்றே பிறப்பிற்கு காரணமான ஆசையை அறுத்து, பேரருளை வழங்கும்.

ஆன்மாக்கள் உய்திபெற்றிட இறைவழிபாடும் சமயச்சின்னங்கள் அணிந்து திருமுறை ஓதி பக்குவம் அடைந்து சிவனருளை பெற்றிடவும் வழிகளாக அமையும். வழிபாட்டின் அடிப்படை சமயச்சின்னங்களைப் போற்றுதலும், அவற்றை முறைப்படி அணிந்து அனுஷ்டித்தலும் ஆகும். சைவ மெய்யன்பர்கள் கைக்கொள்ளுதற்குரிய சாதனங்கள் திருநீறு, திருவைந்தெழுத்து, உருத்திராக்கம் ஆகிய மூன்றாகும்.

திருநீறு:

“பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத்தோர் களுக்கெல்லாம்
ஆசை கொடுப்பது நீறு அத்தமாவது நீறு
நீசம் புகழ்வது நீறு திருவாலவாயன் திருநீறே ”

என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு திருநீறு ஆன்மாக்கள் செய்யும் பாவங்களை நீறாக்கி விடுதலால் நீறு எனவும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடாகிய முக்திச் செல்வத்தைத் தருதலினால் விபூதி எனவும், ஆணவமலமாயைகளைக் கழுவதால் சாரம் எனவும், சிறுதெய்வங்களால் ஏற்படும் துன்பகளினின்றும் நீங்கிக் காப்பாற்றுதலால் காப்பு எனவும் பல பெயர்களை பெறும் என்று பேரூர்ப்புராணம் குறிப்பிடுகின்றது.

திருநீறு அணியும் முறை:

திருநீற்றை உத்தூளனமாகவும் நீர் விட்டு குழைத்து திரிபுண்டரமாகவும் தரித்துக்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு அணியும் தங்கள் சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்களிரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறமிரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறாகும்.

“பக்த்தியோடு சிவசிவா என்று திருநீற்றை பரிந்து

கைகளால் எடுத்து பாரினால் விழாதபடி
அண்ணாந்து செவியோடு பருந்தப் புயமித்தில்

ஒழுக, நித்த மூவிரல்களால் நெற்றியில்
அழுந்தாலுர நினைவாய்த்த திரிபவர்க்கு
நீடு வினை அணுகாது.”

என குமரேச சதகம் திருநீறு அணியும் முறையை விளக்குகிறது திருநீறு அணியாது எக்காரியங்களையும் செய்யத்தொடங்குதல் கூடாது. பிறர் கண்ணுக்குப் புலனாதலும் கூடாது.

“திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று
திருநீறணிந்தேன் தருவாய் சிவகதி”

என்னும் திருப்பாடல் தெய்வத்திருநீற்றினை அணியும் முறையினை உபதேசிப்பதை அறியலாம்.

சாமபல் ஒன்றே உலக முடிவில் யாவும் ஒடுங்கிய காலத்து எஞ்சியிருப்பது இதுவே எல்லாப் பொருள்களின் உண்மைத் தூய நிலையாகும். பச்மாந்தமித்தம் சரீரம் என்பது உபநிடத வாக்கியம். முடிசார்ந்த மன்னரும் மற்றுள்ளோரும் முடிவில் ஒரு பிடிச்சாம்பலாய் வெந்து மண்ணாவது என்னும் வழக்கையும் காணலாம் இறைவன் இவ்வுண்மைகளை உணர்த்தவே திருநீற்றின் வடிவாகவே காடுடைய சுடலை போடி பூசியவனாக விளங்குகிறான். சுடுநீறணி அண்ணல் நீறணி மேனியன் என்னும் திருஞானசம்பந்தரின் அருள் கூற்றும் இதனையே உணர்த்துகிறது. உண்மாசு கழுவுவது நீரென்றே உபநிடதம் உரைக்கேட்டும் என்னும் திருவிளையாடற்புராணமும் இதனை தெளிவு படுத்தும். இறைவன் திருநீறணிந்து, நீறணிவார் உள்ளத்தில் வீற்றிருக்கவே அவர்களின் வினை கெடுகிறது. இதனை தொழுது எழுவார் வினைவளம் நீறெழ நீறணி அம்பலன் எனும் திருக்கோவையார் பாடல் தெரிவிக்கிறது.

திருநீற்றின் பெருமை:

திருநீற்றின் பெருமையையும் தூய்மையையும் உலகில் பரப்பிய அருளாளர்களில் தலை சிறந்து விளங்குபவர் திருஞானசம்பந்தர். தூயதிருநீற்று நெறி என் திசையும் தனி நடப்ப சிவம் பெருக்க வந்த பிள்ளையார் அவதாரம் செய்தார். ஆலவாய் அண்ணலை நினைத்து கூன்பாண்டியன் வெப்பு நோயயை திருமுகம் கருணை காட்டி திருக்கையால் திருநீறு காட்டி மந்திரமாவது நீறு என்னும் திருநீற்றுப்பதிகத்தை பாடி திருநீறு பூசி நீக்கியருளினார். திருநீற்றின் பெருமையை உலகெல்லாம் அறிந்திடவும் செய்தார். இப்பதிகத்தைப் பாடி நீறணிந்தால் பிறவிப்பிணி நீக்கி, இன்புற்று வாழலாம்.

திருநீறு – விபூதி என்றால் ஐசுவரியம், அழிவற்ற செல்வம், இறைவன் அருள் என்று பொருள். இறைவன் அணிவது நீறு, பராசக்தியின் வண்ணம், பூமாதேவியின் நிறமும் நீறே.

நீரில்லா நெற்றி பாழ் என ஒளவையாரும் திரு வெண்ணீறணியாத திருவிலூரும் அவையெல்லாம் ஊரல்ல, அடவிக்காடே , என அப்பர் பெருமானும் மொழிவது அறியத்தக்கது. திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவாரைக்கண்டால் அம்மநாம் அஞ்சமாறே திருநீறு இடா உருத் தீண்டேன் என்னும் திருமுறை தொடர்களும் அரியத்தக்கது. நீறிட்டு யார் கெட்டார். சிவனை மறந்து யார் உயர்ந்தார் என்று உலகியல் மொழியும் எண்ணத்தகுந்தது.

திருநீற்றினை அணிந்து அடியார்களை காணும் போது அவர்கள் யாவராயினும் அடிமைத்திறம் ஒன்றே கருதி வழிபடுகின்ற அடியார்களது திருவுள்ளத்திலே இறைவன் எழுந்தருளியிருப்பான் என்பதனை,

எவரேனும் தாமகவிலாடத்து இட்ட திருநீறும்
சாதனமும் கண்டால் உலகியவராதே
அவரை கண்டபோது உக்கந்து அடிமைத்திறம்
நினைந்து ஈசன் திறமே பேணிக்கவராதே
தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணலாமே

என்னும் அப்பறது திருத்தாண்டகமும்,

சாம்பலைபூசிச் சலனமின்றித் தோன்றுபட்டு உயிமின்களே, எனும் அருளிய திருப்பாடற் பகுதியும் திருநீற்றின் பெருமையை உணர்த்துவன.

திருநீறு தயாரிக்கும் முறை:

திருநீறு பசுவின் சாணத்தை எரித்துத் தயாரிக்கப்படுவது. பசுவின் உடம்பில் அனைத்துத் தேவைகளும் உராய்வதாகப் போற்றுப்பெறுகிறது. பசு இறைவனுக்குரிய பஞ்ச கவ்வியத்தை வழங்கும் பெருமைக்குரியது. திருநீறு தயாரிக்கும் முறைகள் மூன்றாகக் கூறப்படுகின்றது. அவை சுத்தமான பசுவின் சாணத்தை எடுத்து சிவாக்கினியில் தகித்து ஆக்குவது கற்பம், காட்டில் உலர்ந்து கிடக்கும் சாணத்தை எடுத்து முன்சொன்னவாறே தகித்து ஆக்குவது, அனுகற்பம் காட்டில் இயல்பாகத் தீப்பற்றியதால் வெந்து நீரான சாம்பலாப் பஞ்சகெளவியம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியில் தகித்து ஆக்குவது உபகற்பம், எனப்புராணங்கள் கூறுகின்றன.

உருத்திராக்கம்:

கணவனை மணந்த கற்புடையாளுக்கு எவ்வாறு மங்கள நான் இன்றியமையாதோ அது போலவே இறைவனை நாயகனாகக் கொண்ட உயிர்களுக்கும் இது மிக வேண்டுவதாகும்.

சிவபெருமானுக்கு ஆட்பட்டவர் என்று ஒருவரைக்காணும் மாத்திறந்தே அறிந்து கொள்வதற்குரிய அடையாளங்களுள் ஒன்று உருத்திராக்கம்.

பரமசிவன் அமலன் பக்தர்க்குச் சின்னம்

உரு உடலிற் கண்டிகையும் நீறும்

எனும் பாடலும் இதனை உணர்த்தும்.

சிவபெருமானது சின்னங்களாகிய திருநீறும் உருத்திராக்கமும் உயிருக்கு உறுதியைத் தருவனவே அன்றி உடலுக்கும் அழகு தருவனவாகும். ஆதலினால் ஆன்றோர்கள் இவ்வுலகில்

அபிராமி அந்தாதி புலப்படுத்தும்

அம்பிகையின் தத்துவம் !

அன்பர்களே ! வணக்கம்.

எல்லாம் வல்ல பரமேஸ்வரன் திருவருள் துணை கொண்டு நமது ஆலய கும்பாபிஷேக விழா மலரில் அபிராமி அந்தாதி புலப்படுத்தும் அம்பிகையின் தத்துவம் என்ற தலைப்பில் இந்த கட்டுரை வடிவம் பெறுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நமது வாழ்வில் அணைத்து விதமான சுக , துக்கங்களை அனுபவித்து முக்தி பேறு கிடைக்கவும் அணைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியாக இருக்கவும், எல்லாம் வல்ல ஸ்ரீ கால சம்ஹாரமூர்த்தியை வணங்கி , சுருக்கமாக திருக்கையூர்தல வரலாறும் , அபிராமபட்டர் வரலாறும் சிந்தித்து, பிறகு அபிராமி அந்தாதியினை சிந்திப்போம்.

ஊர் – திருக்கடை யூர்

இறைவன் பெயர் – அமிதக்கைஸ்வரர்

இறைவி பெயர் – அபிராமி

தேவராம் பாடியவரிகள் மூவர்கள்

திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர், சுந்தரர்

பாற்கடலைக்கடைந்து எடுத்து அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் (கடம் ) எடுத்துகொண்டு செல்லும் வழியில் நீராடுவதற்காக குடத்தை கீழே இறக்கி வைத்து சென்றனர். நீராடி திரும்பி வந்து குடத்தை எடுக்க முயன்ற போது எடுக்கமுடியவில்லை. குடம் பூமியில் வேரூன்றி விட்டது. ஆகையால் இத்தலம் திருக்கடையூர் என்று பெயர் பெற்றது.

அட்ட வீரட்டா னத்தில் இது முதன்மையாக விளங்கிறது. பாடல் பெற்ற தளத்தில் 47வது தலமாக விளங்குறது. காரி நாயனார் வாழ்த தலம் இது. மார்கண்டேயனுக்காக யமனை சம்ஹாரம் செய்து பிறகு அருள் செய்த தலம் ஆகையால் இங்கே மணிவிழா, பவளவிழா, சதாஅபிஷேகம் ஆயுஷ்ய ஹோமம் போன்றவை கொண்டாடுகிறார்கள். இயமனை சம்ஹாரம் செய்த மூர்த்திக்கு பாலம்பிகை உடனுறை ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தி எனவும். அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமதோடும் இத்தலத்தில் அருள்பலிக்கின்றனர்.

இவ்வாலயத்தில் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுப்ரமணியப்பட்டர் என்ற இயற்பெயருடன் அபிராம பட்டர் அவதரித்து வடமொழியும், தென்தமிழும் , சங்கீதமும் தேவி உபாசனையும் முறையாக பயின்று அவர்யோக முறையில் சரியை , கிரியை கடந்து யோக நிலைக்கு சென்று அபிராமி அம்பிகை சன்னதி முன் தியானத்தில் இருந்தார் . அப்பொழுது திருக்கடையூர் தலத்திற்கு சரபோஜி மன்னன் வருகை புரிந்தார். மன்னரை பார்த்து வணக்கம் செலுத்தாமல் பட்டரோ அம்பிகையின் நினைவில் இருந்தார். மன்னர் இவர் யார் என்று கேட்டார் பக்தர்கள் அவர் ஒரு பித்தர் என்று கூறினார். மன்னர் நம்பாது அவரிடம் சென்று இன்று என்ன திதி என்று கேட்டார். கேட்பவர் யார் என்று உணராமல் யோக நிலையில் அம்பிகையின் பூரணநிலவாக இருக்கக்கூடிய அம்பிகையின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார் பட்டர் இன்று பெளர்ணமி என்று கூறிவிட்டார். மன்னர் கோபம் கொண்டு இன்று தை அமாவாஸ்யை நீரா பௌர்ணமி என்று கூறிகிறார்கள். இன்று இரவுக்குள் பூரணபௌர்ணமி வரவேணும். இல்லையேல் உமக்கு மரணதண்டை என்று கூறி விட்டு சென்று விட்டார் . தியானம் கலைந்தெழுந்து நடந்ததை கேட்டு மனம் கவலை அடைந்தார் பட்டர். தமக்கு ஏட்பட்ட தவறிலிருந்து அபிராமி அம்பிகை தன்னை காத்தருளவேணும் என்று அம்பிகையின் முன்பு உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்கும் அந்தாதியாக பாட துவங்கிறார்.

79வது பாடலாக விழிக்கே அருளுண்டு அபிராமி வல்லிக்கே என்ற பாடலை பாடி முடித்ததும் அம்பிகை அவர் முன் தோன்றி அருட்காட்சி தந்து தன் தாடங்கம் எனும் காது தோட்டினை வானத்தில் தவழவிட்டாள் அந்த தாடங்கம் பலகோடி நிலவு ஒன்று சேர்தது போல் ஒளியை பொழிந்தது . நீ வாய் தவறி மன்னரிடம் கூறிய சொல்லை மெய்யென நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை, தொடர்ந்து பாடு என்று சொல்லி மறைந்தாள்.

அம்பிகையின் பூரண அருள் பெற்று பரவசம் அடைந்து பாடல்களை பாடி நிறைவு செய்தார். மன்னரும் மனமகிழ்ந்து மன்னிப்பு கோரினார். பட்டரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி ஏராளமான மானியங்களை கொடுத்தார். நாமும் தினம் தோறும் அபிராமி அந்தாதி பாடி மகிழ்ந்து அம்பிகையின் திருவருளை பெறுவோம்.

நுறு பாடல்களை கொண்ட அபிராமி அந்தாதியை சில பாடல்களை சிந்தித்து மகிழ்வோம் ஈசன் அருள் துணை நிற்கட்டும்.

அந்தாதி என்ற சொல்லுக்கு, அந்தம் என்றால் முடிவு ஆதி என்றால் ஆரம்பம் . எந்தவார்த்தை கடைசியில் முடிகிறதோ அதே வார்த்தையை ஆரம்பமாகா கொண்டு துவங்குவது அந்தாதி எனப்படும். இங்கே பல அந்தாதிகள் உள்ளது. அதாவது ,

ஒலியந்தாதி , வென்பா அந்தாதி , சிலேடை அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, திருவரங்கத்து அந்தாதி என்று இருந்தாலும் சிறப்பாக இருப்பது அபிராமி அந்தாதி

இந்த அந்தாதி புலப்படுத்தும் தத்துவங்கள் அம்பிகையின் அழகும் கருணையும் சிந்தித்து படித்து மகிழ்வோம்.

முழு முதற்கடவுளாம் விநாயபெருமானை சிந்தித்து வணங்கி போற்றுவோம்.

முதற்பாடல் :.

உதிக்கின்ற செங்கதிர் உச்சத்திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழத்துணையே.

காரிருளை அகற்ற வல்ல செங்கதிரோனின் கைதிகளை போன்றது அம்பிகையின் தன்னுதலில் அணிந்திருக்கும் திலகம். எஙஙனம் கதிரவன் உலகத்து இருள் நீக்கி இன்பம் தருகிறனோ, தாயே ! உன் குங்குமம் என் மன இருளை நீக்கி அறிவையும், ஆற்றலையும் என் வாழ்விற்கு ஒளியையும் தந்திடும் இங்கே அபிராமி என்ற சொல்லுக்கு பேரழகி என்றும் பொருள் பேரழகி என்றால் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அழகி. மூவராளும் பணிந்து வணங்கப்படும் பேரருளின் பேரழகு அவள் இருக்கிறாள் என்னும் பாதுகாப்பு உணர்வால் பெறுகிற நிம்மதி என்ன அழகோ அந்த அழகே அபிராமி.

இரண்டாம் பாடல்,

துணையும் தொழுந்தெய்வமும் பெற்ற தாயும் சுரூதிகளின்

பணையும் கொளுந்தும் பதிகொண்ட வேரும் பணிமலர்ப்பூங்

கணையும் கருப்புச் சிலையுமேன் பாசாங்குசமும் கையில்

அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

இங்கே துணை என்று தொடங்குகிறார் துணை என்றால் நம் வாழ்வில் துணையாக யாரை வைத்து கொள்ள வேண்டும்? நம் உதவிக்கு நம்மைவிட புத்திசாலியாக வைத்து கொள்ள வேண்டும். அப்படி வைத்து கொண்டால் அவர் தான் நம்மை வணங்க வேண்டும். யஐமானரைதான் உதவியாளர் வணக்கம் செலுத்தி வரவேற்க வேண்டும் தவிர யஐமானார் வணக்கம் செலுத்த மாட்டார். ஆனால் இங்கே நாம் யாரை துணையாக வைத்து கொள்கிறோம்? அம்பிகையை அது தொழாது நாம் தான் தொழ வேண்டும்.

Post a comment