No comments yet

Mother Baby Project January 2020

தாய் சேய் நலத்திட்டம்

என்பீல்ட் நாகபூஷணி அம்பாள் ஆலயம் ஊடாக இந்து தமிழ் கலாச்சார சங்கத்தின் தாயின் நிழல் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த திட்டம்  உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படை நோக்கங்கள்.

1. உள்ளூர் மருத்துவ சேவையாளரால்  வறுமை  கோட்டிற்கு  கீழ் வாழும் கர்ப்பிணி தாய் என அடையாளம் காணப்படுவருக்கு உதவி வழங்குவதன் மூலம் அந்த தாயிற்கு உளவியல் ரீதியாக மகப்பேறு காலத்தில் உறுதுணையாக நிற்பது

2.பிள்ளை பிறந்தவுடன் தேவைப்படும் பொருட்களை (பால் மா/ நெஸ்டமோற்  ) வழங்குவதன் மூலம் தாய் சேயினுடைய போசாக்கு குறைபாட்டை நீக்கும் ஒரு ஆரம்ப புள்ளியாகவும் இவ் உதவி இருக்கின்றது

வழங்கப்படும் பொருட்கள்.

போசாக்குக்கு தேவையான பால் மா வகைகள் மகப்பேறின் போது பெண்களுக்கு தேவைப்படும் அடிப்படையான பொருட்கள் (இலங்கை பணத்திற்கு அண்ணளவாக ரூபா 5000/=) போன்றவை .

பயனாளிகளை தெரிவு செய்யும் இடம்

போரினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய வன்னி பிரதேசத்திலிருந்தே தற்போது தெரிகின்றோம்.

தற்போது மாதாந்தம் 10 பயனாளிகளே பயனடைகின்றனர் , நீங்களும் இணைவதன் மூலம் ஆதரவு வேண்டி நிற்கும் பலருக்கு உதவலாம்.

நன்கொடையாளர்களை எம்முடன் கைகோர்க்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்

தொடர்புகளிற்கு ஆலய இலக்கம் 00442088843333.

நன்றி

Post a comment